ஏசுபிரான் கூறிய தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள்கிடைக்கும் என்ற வரிகளை நான் ஹிந்து தர்மத்தின் மூன்று யோகங்களாகிய ராஜ யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகங்களை குறிக்கும் என்று கருதுகின்றேன். எப்படியெனில், முதலில் கூறிய தட்டுங்கள் திறக்கப்படும் என்பது, சக்தியாகிய குண்டலியினை சிவமாகிய சஹஸ்ராரத்தில் சேர்த்திட வேண்டும். இதற்கு குண்டலியானது சிரத்தை தட்டி சிவத்தோடு சேரவேண்டும். இவ்வாறு குண்டலினி சிரத்தை, கபாலத்தை தட்டி முக்தி தரும் என்பதாலே, தட்டுங்கள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது, பக்தி மார்கத்தை குறிக்கும், இதில் இறைவனை வேண்டி முக்தி பெற வேண்டும் என்பதினாலே கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இறுதியாக அவர் குறிப்பிட்டுள்ளது தேடுங்கள் கிடைக்கும் என்பது, அது ஞான மார்கத்தினை குறிக்கும் என்று கருதுகின்றேன் எப்படியெனில், நான் யார் என்ற கேள்வியும், நான் எங்கிருந்து வந்தேன், எங்கு செல்வேன் என்ற கேள்விக்கெல்லாம் விடையினைத் தேடினால் முக்தி கிடைக்கும் என்பதே இறுதிக் கூற்று.
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரொம்பவே வித்தியாசமான சிந்தனை!
திவா அவர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.
Post a Comment